பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எதிர்கால கனவு:  அழகூர்.  அருண். ஞானசேகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

எதிர்காலக்   கனவுதனை   காணாதார்   இல்லை
             இனிதான   வாழ்வடைய   விரும்பாரும்   இல்லை !
மதிகொண்டத்   திறத்தாலும்   உழைப்பாலும்   வாழ்வில்
             மகத்தான   உயர்வடைதல்   தவறொன்றும்   இல்லை !
விதியதனின்   பலனாக   இடர்கள்பலக்   கண்டும்
             வெற்றிதனை   முடிவினிலே   காண்பதுவே   திறமை !
சதிராடும்   வகைதன்னில்   வாழ்ந்தவர்கள்   வாழ்வும்
             சரிந்தக்கதை   உண்டு   திறனற்ற   தாலே !
இருப்பதனைக்   காப்பதும்   எளிதான   ஒன்றே
             என்றெண்ண   வேண்டாம் ,  வாழ்கின்றப்  போதில்
பொறுப்புடன்   உழைத்துநாம்   பொருளீட்ட   வேண்டும்,
             போதுமென்   றயர்ந்திட   போய்விடும்   ஓர்நாள் !
மறுக்கவுந்   தகுமோ,   மறப்பதும்   முறையோ ?
             மாண்புடையக்   குடிமகன்   எனப்போற்றத்   தகுமோ ?
பெருமைமிகு   மைந்தனெனக்   காண்பவர்   போற்றும்
             பெற்றோரின்   கனவுதனை   நனவாக்க   வேண்டும் !
            
கனவினைக்   கண்டிடச்   சொன்னதும்   அப்துல்
                   கலாமெனும்   அறிஞனவன் ;
          காலத்தினால்   நல்ல  அழியாப்   புகழ்தன்னைக்
                   கண்டிட்ட   மன்னவன் !
நனவென்   றாக்கிட   அதற்கென   உழைப்பதும்
                   நம்மின்   கடமையன்றோ ?
          நாளையும்   கோளையும்   எதிர்பார்த்   திருந்திட
                   நமைவெற்றி   வந்தடையுமோ ?
தனதுநல்   உழைப்பே   உயர்வினைத்   தருவது
                   தான்வுண்மை    இதுதன்னை ,
          தவறா   துணர்வதே   நாம்கொண்ட   வாழ்வின்
                   தலையாயக்   கடமையன்றோ ?
உனதுநல்   எதிர்காலம்   உன்றன்நற்   கரங்களில் ,
                   உரைத்தவன்   நரேந்திரன் ;
          உன்னதங்   காண்கின்றத்   திறந்தனைக்   கொண்டிட
                   உயர்வினைக்   காண்பாயே !
கனவுகளே இல்லாது   வாழ்ந்தவர்கள்   இல்லை
           காதல்முதல்   வளமைவரை   என்பதுதான்   உண்மை !
நனவுகளென்   றாக்குவதே   வாழ்க்கையதன்   வெற்றி
           நயமுடனே  வாழத்தான்   சுற்றமதும்   போற்றும் !
வினயமுற்றக்   கனவுகளை   காண்பதுதான்   நன்றாம்
           விகாரக்   கனவுகளை   தவிர்ப்பதுதான்   முறையாம் !
தனகெனவோர்   கனவதுவும்   இருக்கத்தான்   வேண்டும்
           தரங்கொண்டக்   கனவாக   சிறப்பேதான்   என்றும் !             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.